Chennai recorded the highest rainfall in the last 30 years!

சென்னை நுங்கம்பாக்கத்தில் நவம்பர் 1 ஆம் தேதியில், கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் தெரிவித்துள்ளார். வரும் 5 ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழக பகுதிகள் மற்றும் வட இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்  நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, புதனன்று கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,  புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய 17 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

image

மன்னார் வளைகுடா, தமிழகம் மற்றும் வடக்கு இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச்  செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது

Post a Comment

Previous Post Next Post