சட்டவிரோதமாக குழந்தையை விற்க முயன்ற 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது

சேலத்தில் சட்டவிரோதமாக குழந்தையை விற்பனை செய்ய எடுத்து வந்த இர்ண்டு பெண்கள் உள்பட இடைத்தரகர்கள் மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தளர்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையை விற்பனை செய்ய மூன்று லட்சம் ரூபாய் பேரம் பேசிய அவரது உறவினர், வளர்மதி என்பவர் மூலம் குழந்தையை சேலத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

image

இந்நிலையில், குழந்தையை வாங்குவதற்காக ஈரோட்டைச் சேர்ந்த இடைத்தரகர் லதா மற்றும் அவரது கணவர் மதியழகன் ஆகியோர் சேலம் சீலநாயக்கன்பட்டி ரவுண்டானா பகுதிக்கு வந்துள்ளனர். இதுதொடர்பாக காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து போலீசார் சாதாரண உடையில் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது குழந்தையை எடுத்து வந்த வளர்மதியிடம் இருந்து குழந்தையை வாங்கிச் செல்ல வந்த இடைத்தரகர்கள் லதா மற்றும் அவரது கணவர் மதியழகன் ஆகிய இருவர் உட்பட மூவரை கையும் களவுமாக பிடித்தனர் இதையடுத்து அவர்களிடமிருந்து பிறந்த நான்கு நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

image

இதைத் தொடர்ந்து சட்டவிரோதமாக குழந்தையை கடத்துதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து மூவரையும் நீதிமன்ற காவலில் அடைக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் லதா மற்றும் அவரது கணவர் இருவரும் தொடர்ந்து குழந்தைகளை விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போது மூவரிடமும் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post