’நயனும் & நானும் அம்மா, அப்பா ஆகிட்டோம்’ -ட்விட்டரில் மகிழ்ச்சியை பகிர்ந்த விக்னேஷ் சிவன்!- We have become mother and father' - Vignesh Sivan shared his happiness on Twitter

 ’நயனும் & நானும் அம்மா, அப்பா ஆகிட்டோம்’ -ட்விட்டரில் மகிழ்ச்சியை பகிர்ந்த விக்னேஷ் சிவன்!

Vignesh-Shivan-and-Nayanthara-blesses-with-twin-baby-boys

நடிகை நயன்தாராவுக்கும், தனக்கும் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

பிரபல நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். 2015ஆம் ஆண்டு நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடித்தபோது நயன்தாராவிற்கும், விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்த நிலையில் கிட்டத்தட்ட 7 வருடங்களாக டேட் செய்துவந்தனர். இந்நிலையில் 4 மாதங்களுக்கு முன்பு மாமல்லபுரத்தில் வைத்து பிரம்மாண்டமாக திருமணம் செய்துகொண்டனர்.

அதன்பிறகு வெளிநாடுகளுக்கு ஹனிமூன் சென்ற தம்பதியர் அவ்வப்போது சமூக ஊடகங்களில் புகைப்படங்களை பதிவிட்டு நெட்டிசன்களை தெறிக்கவிட்டனர். இந்நிலையில் விக்னேஷ் சிவன் தற்போது மற்றொரு முக்கிய அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். நயனுக்கும், தனக்கும் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார்.

image

விக்னேஷ் சிவன் தனது ட்வீட்டில், ’’நயனும், நானும் அம்மா, அப்பா ஆகிவிட்டோம். இரண்டு ஆண் குழந்தைகளால் நாங்கள் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறோம். எங்களுடைய பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசிர்வாதங்கள், நன்மைகள் எல்லாம் சேர்ந்து எங்களுக்கு இரண்டு ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தைகளின் வடிவில் கிடைத்துள்ளது. எங்களுடைய உயிர் மற்றும் உலகத்துக்கு உங்கள் அனைவருடைய ஆசிர்வாதங்களும் தேவை’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

விக்னேஷ் சிவன் ட்வீட் பதிவிட்ட சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கானோர் அதனை ரீட்வீட் செய்ததுடன், தங்கள் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Thanks:

puthiyathalaimurai.

Post a Comment

Previous Post Next Post