ஆதித்த கரிகாலன், குந்தவையாக வேடமணிந்து பொன்னியின் செல்வன் படம் பார்க்க வந்த ரசிகர்கள்- Aditha Karigalan, fans came to watch Ponni's Selvan dressed as a squatter

 ஆதித்த கரிகாலன், குந்தவையாக வேடமணிந்து பொன்னியின் செல்வன் படம் பார்க்க வந்த ரசிகர்கள்

The-fans-came-to-watch-Ponniyin-Selvan--dressed-as-characters

கும்பகோணத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் உள்ள கதாபாத்திரங்கள் போல் வேடமடைந்து படம் பார்க்க வந்த ரசிகர்களால் பரப்பரப்பு ஏற்பட்டது.

தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்தினம். இவர், 'பொன்னியின் செல்வன்' நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியின் செல்வன்-1 என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

image

இந்த திரைப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

image

தமிழ் சினிமாவில் இதுவரை அதிகம் வசூலித்த படங்களின் வரிசையில் 4வது இடத்தில் பொன்னியின் செல்வன் இருக்கிறது. இந்நிலையில் நேற்று மதியம் நடந்த காட்சியில் இன்னர் வீல் கிளப் சார்பில் நந்தினி, குந்தவை பழுவேட்டரையர், அருள்மொழி வர்மன் வந்தியதேவன், ஆதித்த கரிகாலன் உள்ளிட்ட கதாபாத்திரங்கள் போல் வேடமணிந்து ரசிகர்கள் திரையரங்கத்திற்கு வந்தனர். அப்போது ரசிகர்கள் அவர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

Thanks:

puthiyathalaimurai.

Post a Comment

Previous Post Next Post