முதல்வர் செல்லும் வழியில் நிற்கும் காவலர்கள் எண்ணிக்கை குறைப்பு!

 முதல்வர் செல்லும் வழியில் நிற்கும் காவலர்கள் எண்ணிக்கை குறைப்பு

பொதுமக்களின் நலனிற்காக சாலைகளில் முதலமைச்சர் செல்லும்போது நிற்கக்கூடிய காவலர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் தனது இல்லத்திலிருந்து தலைமைச்செயலகம் செல்லும் வழியில் பாதுகாப்பிற்காக 20 அடிக்கு ஒரு காவலர்கள் என்ற வகையில், பாதுகாப்பிற்காக போக்குவரத்தை சீர் செய்ய நிற்பது வழக்கம். காவலர்களுடன், போக்குவரத்து காவலர்களும் பணியில் ஈடுபடுவார்கள். 

முதலமைச்சர் தலைமை செயலகத்தில் இருந்து இல்லம் நோக்கி புறப்படும் போது, அவர் செல்லும் பாதையில் சில மணி துளிகள் போக்குவரத்து சீர் செய்யப்பட்டு, எளிதில் கான்வாய் வாகனம் செல்ல வழிவகை செய்யப்படுவதோடு, எதிர்திசையில் செல்லும் வாகனங்கள் வழக்கமாகவே செல்லும்.

image

இந்த நிலையில், முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, சாலை பாதுகாப்பிற்காக நிற்கக்கூடிய காவலர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளதோடு, முக்கிய சந்திப்புகளில் மட்டும் கான்வாய் செல்லும் நேரத்தில், போக்குவரத்தை சீர் செய்ய காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவதோடு கான்வாய் செல்லும் நேரத்தில் மட்டும், Green signal போடப்பட்டு எளிதில் வாகனம் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post