அயல்நாட்டு மதுபானங்கள் விலை உயர சட்ட மசோதா!

இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மதுபானங்கள் விலை உயர சட்ட மசோதா

தமிழக முழுவதும் உள்ள அரசு மதுபான கடைகளில், இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மதுபானங்கள் விலை உயர்த்துவதற்கான சட்ட மசோதா அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேறியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் மதுபானங்கள் மற்றும் பீர் விலை ஏற்றப்பட்டதற்கான சட்ட மசோதா தற்போது நிறைவேறி உள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ஒயின் மற்றும் பீர் ஆகியவற்றின் மீது புரூப் லிட்டர் ஒன்றுக்கு 450 இருந்து 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post