பார்த்திபன் அவார்ட் பைத்தியம் கார்த்தி பப்ளிசிட்டி பைத்தியம்-ப்ளூ சட்டை
நடிகர் கார்த்திக் நடிப்பில் உருவாகி இருக்கும் சர்தார் படத்தை பொதுமக்கள் அனைவரும் நன்றாக இருக்கிறது என்று கூறி வந்த நிலையில், படம் நன்றாக இல்லை என்று ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். தமிழில் குறிப்பிட தகுந்த நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் கார்த்தி. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விருமன் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை தரவில்லை.
எனவே அடுத்த படத்தை கவனத்துடன் தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் கார்த்தி. சர்தார் எந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க ஒப்பந்தமானார் கார்த்தி. இந்த படத்தை பிஎஸ் மித்ரன் இயக்கியிருக்கிறார்.்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் கார்த்திக்குடன் இணைந்து ராஷி கண்ணா, லைலா போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். படம் நேற்று தமிழகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
தற்போது சென்னை போன்ற மாநகரங்களில் அனைத்திலும் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீர் தான் வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. அதுபோல் பல இடங்களிலும் வாட்டர் பாட்டில்களில் அடைத்து விநியோகிக்கப்படும் குடிநீர்களை நம்மால் காண முடிகிறது.
அந்த வாட்டர் மாஃபியாக்களுக்கு எதிரான நல்ல கதையம்சத்துடன் கூடிய படமாக சர்தார் இருந்தது. தேசப்பற்று உள்ள இராணுவ உளவாளி ஒருவர், சேதப்பற்று இல்லாத உள்துறை அதிகாரி ஒருவரை கொன்று விடுகிறார். இதனால் இராணுவ உளவாளியான அப்பா கார்த்திக்கை கைது செய்து சிறையில் அடைத்து விடுகிறார்கள். பின்னர் அவர் சிறையிலிருந்து தப்பித்து தனது மகன் கார்த்திக்குடன் இணைந்து வாட்டர் மாஃபியாக்களுக்கு எதிராக எப்படி போராடுகிறார்.? என்பதே படத்தின் மீதி கதை.
இந்த படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த பலரும் படம் நன்றாக இருப்பதாகவே கூறினர். ஆனால் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் படம் நன்றாக இல்லை என்ற விமர்சனத்தை முன்வைத்துள்ளார்
Tags:
Cinema