அசீமுக்கு ரெட் கார்டு கொடுத்த கமல்.!
பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் அசீமுக்கு ரெட் கார்டு கொடுத்துள்ள ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. பிக்பாஸில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள அசீம், ஆயிஷாவிடம் நடந்து கொண்ட விதம் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. மேலும் அவர் விக்ரமனை வாடா போடா என்று ஏக வசனத்தில் திட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது.
பிக்பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சி கடந்த ஒன்பதாம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 11 நாட்களை கடந்துவிட்ட பிறகு தற்போது சண்டை சச்சரவு என மிக அதிகமாக இருக்கிறது. எப்போதும் போல் இல்லாமல் இந்த முறை 21 போட்டியாளர்களை தேர்வு செய்துள்ளது பிக்பாஸ் டீம். அதேபோல் தொலைக்காட்சியில் ஒரு மணி நேரம் மட்டுமே ஒளிபரப்பு செய்து வந்த நிலையில் ஹாட்ஸ்டார் இல் 24 மணி நேரம் பார்க்கும் விதமாக தற்போது ஒளிபரப்பு செய்து வருகிறது.
இந்த 24 மணி நேரம் ஒளிபரப்பு, பலருக்கும் ஆப்பு அடிக்கும் விதமாக உள்ளது, பலரின் உண்மை முகங்களை தெரிந்து கொள்ளும் வகையில் இருக்கிறது. நேற்று பிக்பாஸ் டீம் ஒரு போட்டியை வைத்திருந்தது. அதில் தகுதிக்கு ஏற்ப தங்களை வரிசைப்படுத்திக் கொள்ள போட்டியாளர்களை அறிவுறுத்தி இருந்தது பிக்பாஸ். எப்போதுமே இந்த போட்டி வைத்தாலே சண்டை நிகழும் தான்.
ஆனால் இந்த முறை கொஞ்சம் ஓவராக சென்று விட்டது. குறிப்பாக அசீம் ஆயிஷாவிடம் சென்று நீ இந்த வீட்டில் தூங்குவதை தவிர வேறு என்ன செய்து கொண்டு இருந்தாய் என்று காட்டமாக கேள்வி எழுப்பினார். மேலும் ஒரு படி மேலே போய் கையை நீட்டி பேசாதே என்று அசீம் சொல்லிக் கொண்டிருக்க, நான் அப்படித்தான் பேசுவேன் என்று பதிலுக்கு ஆயிஷா கத்திக் கொண்டிருந்தார். திடீரென ஆயிஷாவை பார்த்து போடி வாடி என்று ஒருமையில் கடுமையாக பேசினார் அசீம்.
அசீமின் இந்த நடவடிக்கை பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தியது. ஏதோ இவர்தான் நியாயவாதி போல் பலரையும் திட்டி தீர்க்கத் தொடங்கினார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அசீமுக்கு பைத்தியம் முத்தி விட்டது. அவரை முதலில் வெளிய அனுப்புங்கள் என்று மீம்ஸ்களை போட்டு வறுத்து எடுக்க தொடங்கினர்.
இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் வீட்டில் உள்ள அனைவரிடமும் ரெட் கார்டு கொடுக்க சொல்லி கமல் சொல்ல அனைவரும் அசீம்க்கு ரெட் கார்டு கொடுக்கின்றனர்.
Tags:
Cinema