தனக்கு பணமும், புகழும் வேண்டாம் தனது பிள்ளைகள் தான் முக்கியம்-ஜிபி முத்து

 தனக்கு பணமும், புகழும் வேண்டாம் தனது பிள்ளைகள் தான் முக்கியம்-ஜிபி முத்து


பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின்பு உடல்நலம் சரியில்லாத தனது மகனை பார்த்து அவருடன் எடுத்த புகைப்படத்தை ஜிபி முத்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். தனக்கு பணமும், புகழும் வேண்டாம் தனது பிள்ளைகள் தான் முக்கியம் அவர்களுடன் படுத்து தூங்கினாலே தமக்கு போதும் என்று பெருந்தன்மையாக பேசிவிட்டு பிக்பாஸ் என்னும் மிகப்பெரிய வாய்ப்பை உதறிவிட்டு சென்றுள்ளார் ஜி பி முத்து. 

ஒரு காலத்தில் பணத்திற்கு மிகவும் கஷ்டப்பட்ட நிலையில் விஷம் அருந்தி தற்கொலை வரை முயற்சி செய்தவருக்கு அரிய வாய்ப்பாக கிடைத்தது பிக்பாஸ் நிகழ்ச்சி. ஆனால் இந்த பணம் இன்றைக்கு வரும் போகும் ஆனால் தன் பிள்ளைகள் தான் முக்கியம் என்று அவர் கூறியது, பணம் பணம் என்று ஓடும் பலருக்கும் பிள்ளைகளின் அருமையை புரிய வைத்து சென்றிருக்கிறார் ஜி பி முத்து.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்தவர் பேச்சி முத்து, மரவேலை பார்த்து வந்த இவர் பின்னர் ஜி பி முத்து என பெயரை மாற்றிக் கொண்டார். டிக் டாக் செயலி வந்தபோது அதில் ஈடுபாடு கொண்டு வீடியோக்களை வெளியிட்டு வந்தார். ஒரு நாளைக்கு 80 வீடியோ வரை போடுவேன் என்று அவரே கூறியிருக்கிறார். ஆரம்பத்தில் பலரும் அவரை வெறுத்தனர். 

கெட்ட வார்த்தையை அதிகம் பேசுகிறார் என்று அவரை பலரும் வெறுத்து வந்தனர். டிக் டாக் செயலி முடங்கிய பிறகு youtube பக்கத்தில் சேனலை தொடங்கிய அவருக்கு அவரது ரசிகர்கள் தொடர்ந்து கடிதங்கள் எழுதி வந்தனர். கடிதங்கள் மிகவும் காமெடியாக இருந்தால், தொடர்ந்து கடிதங்கள் வீடியோ வெளியிடுமாறு அவரைக் கேட்டுக் கொண்டு வந்தனர். இதனால் அவர் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டதன் மூலமாக யூடியூப்பில் இருந்து அவருக்கு வருமானம் வரத் தொடங்கியது.



இதன் பின்னர் அவரது வாழ்க்கையில் சற்று மாற்றங்கள் ஏற்பட்டது. தொடர்ந்து படங்களில் நடிக்கும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது. தற்போது மூன்று படங்கள் வரை நடித்து முடித்திருக்கிறார் ஜி பி முத்து. இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 6ல் முதல் போட்டியாளராக உள்ளே சென்ற அவர், 10 நாட்கள் கூட ஆகாத நிலையில் தன் பிள்ளைகளை தேடுவதாகவும் தனக்கு மிகுந்த மன அழுத்தம் இருப்பதாகவும் தன்னை வெளியில் விடும்படியும் தொடர்ந்து கேட்டு வந்தார். 

இதையடுத்து நேற்று கமலஹாசனிடம் பேசிவிட்டு பின் வாசல் வழியாக அவர் வீட்டை விட்டு வெளியேறினார். தொடர்ந்து அவரது மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படங்களையும் பகிர்ந்து இருந்தார் இந்த நிலையில் தற்போது மகன் வீடு திரும்பிய பின்பு அவருடன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பதிவிட்டு இருக்கிறார். கமலஹாசன் கூறியது போல ஜி.பி முத்து நல்ல போட்டியாளர் என்பதை தாண்டி நல்ல தகப்பனார் என்று மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

Post a Comment

Previous Post Next Post