நம்ம ஊரு பொறுக்கிங்க மாறவே மாட்டங்க- பதிவிட்ட சின்மயி

 நம்ம ஊரு பொறுக்கிங்க மாறவே மாட்டங்க- பதிவிட்ட சின்மயி



நம்ப ஊர் பொறுக்கிகள், பொறுக்கிகள் தான். அவர்கள் என்றைக்குமே மாறப் போவதில்லை, ஏனென்றால் அவர்கள் வளர்ப்பு அப்படி என்று தன் குழந்தைகளை விமர்சித்தவர்களை கடுமையாக விமர்சித்து இருக்கிறார் பின்னணி பாடகி சின்மயி. ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடல் மூலமாக தமிழின் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் சின்மயி. 

தன்னுடைய மெல்லிய குரலால் பல இதயங்களை கட்டி போட்டார். புகழின் உச்சியை அடைந்தார். ஆனால் இதெல்லாம் வைரமுத்துவின் மீது இவர்கள் வைத்த பாலியல் குற்றச்சாட்டுக்கு முன்பு நடந்தவை. வைரமுத்து அமெரிக்காவில் இருந்தபோது தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்ற மிகப்பெரிய குற்றச்சாட்டை சின்மயி முன் வைத்தார். அது தொடங்கி சின்மயியை பலரும் விமர்சித்து வருகின்றனர். அவரும் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்.

திருமணம் ஆகி 7 ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டை குழந்தைகளுக்கு தாயாகி இருந்தார் சின்மயி. அவர் கர்ப்பமாக இருந்த போது எந்த புகைப்படமும் வெளியாகாததால் வாடகைத்தாய் முறையில் தான் இந்த குழந்தைகளை பெற்றுக் கொண்டீர்கள் என்று அவர் மீது நேரடியாக குற்றச்சாட்டுகளை பலர் வைத்திருந்தனர். 

இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக 32 வாரங்களில் தான் எடுத்துக் கொண்ட ஒரே ஒரு புகைப்படம் என்று, கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை சமீபத்தில் பகிர்ந்து இருந்தார். அது மட்டுமில்லாமல் தன்னுடைய இரட்டை குழந்தைகளுக்கு பாலூட்டுவது போன்ற புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். இந்த புகைப்படத்திற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ஆனால் சிலர் விஷமத்தனமாக வைரமுத்துவையும் சின்மயியையும் தொடர்பு படுத்தி வைரமுத்துவிற்கு வாழ்த்துக்கள் என்று தவறான பொருள் கொள்ளும்படி பதிவிட்டு வந்தனர். இதை பார்த்த கடுப்பாகிய சின்மயி ஊர் பொறுக்கிகள் ஊர் பொறுக்கிகள் தான், அவர்களை என்றும் திருத்தவே முடியாது. 

ஏனென்றால் அவர்களின் வளர்ப்பு அப்படி என்று கூறியிருக்கிறார். மேலும் இந்த புகைப்படத்தை நான் பதிவிட்டேன், இதற்கு தமிழர் ஒருவர் வந்து பதில் அளித்திருக்கிறார். நான் எனது கர்ப்ப கால புகைப்படத்தை வெளியிட்டதற்கு உண்மையான காரணம் இருக்கிறது. தமக்கு ஏற்கனவே கருச்சிதைவு ஏற்பட்டதால் தான் புகைப்படத்தை வெளியிடவில்லை. 

ஆனால் என்னை பாலியல் ரீதியாக சீண்டியவரை என் குழந்தைகளின் தந்தை என்று கூறுகிறார். நம்ம ஊர் பொறுக்கிகள், பொறுக்கிகள் தான். ரத்தத்திலேயே ஊறுனது. அவர்களின் வளர்ப்பு அப்படி என்று காட்டமாக பதிவிட்டு இருக்கிறார்.

Post a Comment

Previous Post Next Post