ரவீனாவுடன் நெருக்கமாக இருக்கும் வருண்

 ரவீனாவுடன் நெருக்கமாக இருக்கும்  வருண்

மௌன ராகம் சீரியலில் சக்தி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரவீனாவும் வருண் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சல்மானும் தற்போது இணைந்து ஒரு ரீல்ஸ் ஒன்றை செய்திருக்கின்றனர். அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இவர்கள் இருவரின் ஜோடி நன்றாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான தொடர் தான் மௌன ராகம். பிக்பாஸ் ஒளிபரப்பு தொடங்கிய நாள் முதல் இரவு 7:30 மணிக்கு பதிலாக ஆறு மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. மற்ற சீரியல்கள் போல் அல்லாமல், ஏதாவது ட்விஸ்ட் நடந்தால் அதை உடனடியாக உடைத்து விடுவது இந்த சீரியலின் ஸ்பெஷாலிட்டி. வழவழவென்று ஜவ்வென்று இழுக்காமல் சீக்கிரமாக ட்விஸ்டை உடைப்பதால், இந்த சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு.

கடந்த ஒரு வாரமாக ஸ்ருதி தான் கர்ப்பமாக இருப்பதாக நாடகமாடி வந்தார். இதை வீட்டில் உள்ள அனைவரும் எப்போது கண்டுபிடிப்பார்கள் என்று எண்ணியிருந்த நிலையில், இந்த வாரமே அந்த ட்விஸ்ட்டை உடைத்துள்ளனர். சக்தி ஸ்ருதிக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவரிடம் சென்று உண்மைகளை கண்டறிந்து ஸ்ருதியிடம் பேசிக் கொண்டிருந்ததை, வருண் ஒட்டுக் கேட்டு வீட்டில் உள்ள அனைவரிடமும் சொல்லிவிட்டார். 

இதனால் தருண் கோபமாகி சண்டை ஏற்படுகிறது. இதற்குப் பின்பு என்ன நடக்கும் என்ற ஆவல் ரசிகர்களிடையே தொற்றிக் கொண்டுள்ளது. இந்த சீரியலில் சக்தி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரவீனா. சோசியல் மீடியாவில் மிக ஆக்டிவாக இருக்கும் அவர் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்களை செய்து அவ்வப்போது பதிவேற்றி வருகிறார்.


மட்டுமில்லாமல் ரவீனா தாஹா என்று தன் பெயரிலேயே youtube சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வீடியோக்களை எடுத்து பதிவேற்றுவது அல்லது ஏதாவது வெளிவர நாடுகளுக்கோ அல்லது வெளியூர்களுக்கு சென்றால் பொதுவெளியில், மக்கள் நிறைந்த இடங்களில் நடனமாடி அதை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றுவது என்று செய்து வருகிறார் ரவீனா. 

ரவீனாவை இன்ஸ்டாவில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் ரவீனா தன்னுடன் நடிக்கும் சக நடிகரான சல்மானுடன் மிக நெருக்கமான ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இவர்கள் இருவரின் ஜோடி திரையில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் நன்றாக இருப்பதாக அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Post a Comment

Previous Post Next Post