
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த காவல்துறை அனுமதி அளித்துள்ளது. அதன்படி காமராஜர் சிலையில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு கடலூர் சாலை சிங்காரவேலு சிலைக்கு சென்றடையும்.

இதேபோல காரைக்கால் மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் புறப்பட்டு கடற்கரை சாலையை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்கரை சாலையில் உள்ள சிங்காரவேலு சிலை அருகே ஆர்.எஸ். எஸ் அமைப்பின் பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளதாக காரைக்கால் மாவட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இன்று பேரணி நடத்தும் நிலையில், சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதற்காக மனிதச்சங்கிலிப் போராட்டம் நடத்தப்படுமென மதச்சார்பற்ற கூட்டணியினர் அறிவித்துள்ளனர். காந்தி ஜெயந்தி தினமான இன்று புதுச்சேரியிலும் காரைக்காலிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பேரணி நடத்த, அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News