'வாரிசு' பட ஷுட்டிங் ஸ்பாட் உற்சாகமடைந்த ரசிகர்கள்

சென்னை எண்ணூரில் வாரிசு பட ஷூட்டிங்கை காண வந்த ரசிகர்களை பார்த்து விஜய் கையசைத்ததால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

நடிகர் விஜயின் 66-வது படமான வாரிசு என்ற படத்தை மலையாள இயக்குநர் வம்சி இயக்குகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை அன்று ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. வாரிசு' படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க, ஸ்ரீகாந்த், சரத்குமார், குஷ்பு, சங்கீதா, பிரபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். 

image

இந்த நிலையில் இந்த படத்தின் படபிடிப்பு சென்னை எண்ணூர் பகுதியில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து ஆயிரம் கணக்கில் ரசிகர்கள் படபிடிப்பை காண இரவு என்று கூட பாரமால் குவிந்திருந்தனர். இதைத் தொடர்ந்து படப்பிடிப்பை காண ஆயிரம் கணக்கில் குவிந்திருந்த ரசிகர்களை காண வெளியே வந்து விஜய் அவர்களை பார்த்து கையசைத்தார். விஜயை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆனந்த கூச்சலிட்டனர்.

Post a Comment

Previous Post Next Post