அதர்வாவின் ‘ட்ரிகர்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு - வெளியான தகவல்- Atharva's 'Trigger' OTT Release Date Announcement

 Atharva's 'Trigger' OTT Release Date Announcement

Trigger-OTT-release-date-When-and-where-to-watch-the-Atharvaa-starrer-action-thriller-online

நடிகர் அதர்வாவின் ‘ட்ரிகர்’ திரைப்படம், திரையரங்குகளில் வெளியான 23 நாட்களிலேயே ஓடிடியில் வெளியாக உள்ளது.

‘டார்லிங்’, ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’, ‘100’, ‘கூர்கா’ உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர் இயக்குநர் சாம் ஆண்டன். இந்தப் படங்களைத் தொடர்ந்து அதர்வா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, ‘ட்ரிகர்’ படத்தை இயக்கி இருந்தார் சாம் ஆண்டன். இந்தப் படத்தில் தான்யா ரவிச்சந்திரன், சீதா, கிருஷ்ணா, வினோதினி, அருண்பாண்டியன், ராமதாஸ், சின்னி ஜெயந்த் எனப் பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

குழந்தை கடத்தல், திருடன் - போலீஸ் கதையை மைமாக வைத்து ஆக்ஷன் த்ரில்லலாக உருவாகி இருந்த இந்தப் படம், கடந்த 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியானநிலையில் பார்வையாளர்களை பெரியதாக ஈர்க்கவில்லை. இந்தப் படத்திற்கு பி.எஸ். மித்ரன் வசனம் எழுதியிருந்தார். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவும், ரூபன் எடிட்டிங் பணிகளையும் மேற்கொண்டிருந்தனர். ஜிப்ரான் இசையமைத்திருந்தார். இந்நிலையில், திரையரங்குகளில் வெளியான 23 நாட்களிலேயே ‘ட்ரிகர்’ திரைப்படம், ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

image

திரையரங்குகளில் வெளியாகி ஒரு மாதத்திற்குப் பிறகே ஓடிடியில் படத்தை வெளியிட்டு வந்த நிலையில், அதர்வாவின் ‘ட்ரிகர்’ திரைப்படம் 23 நாட்களிலேயே வெளியாக உள்ளது. ஏற்கனவே அதர்வாவின் ‘குருதி ஆட்டம்’ திரைப்படமும் ஆஹா ஓடிடி தளத்தில் தான் வெளியாகியிருந்தது.

Thanks.

puthiyathalaimurai.

Post a Comment

Previous Post Next Post