
சென்னையில் இருந்து மதுரை வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசும்போது...
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தேர்தல் வாக்குறுதிகளில் அளித்தவற்றில் 200-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி வாக்களிக்காத மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளார்.
இன்று சி.பா.ஆதித்தனார் பிறந்த நாள், முதன் முதலில் மதுரை முரசு, தமிழன் பின்னர் 1942ல் தினத்தந்தி ஏட்டை மதுரையில்தான் தொடங்கினார் ஆதித்தனார். பத்திரிக்கை துறையில் பெரும் புரட்சியை உருவாக்கி சாமானிய மக்கள் முதல் வங்களா வாசிகள் வரை உள்ளூர் செய்தி முதல் உலக செய்தி வரை வழங்கிய தமிழர் தந்தை ஆதித்தனார் புகழ் நிலைத்திருக்கும். தமிழ்நாடு வரலாற்றில் முக்கியமான நாள் அவரது பிறந்த நாளில் போற்றி வணங்குகிறேன் என்றவரிடம் 7 பேர் விடுதலை குறித்து கேட்ட கேள்விக்கு....

7 பேர் விடுதலை குறித்து முன்னாள் ஆளுநரிடம் அளித்த மனுக்கள் குப்பைத்தொட்டியில் போடப்பட்டுள்ளது. தற்போது வந்துள்ள புதிய ஆளுநர் என்ன மாதிரி நடவடிக்கை எடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். உச்சநீதிமன்றம் 7 பேரை விடுதலை செய்ய எந்தவித தடையுமில்லை என கூறியுள்ளது. தமிழக அரசும் அதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறது புதிய ஆளுநர் செயல்களை பொறுத்திருந்து தான் பார்க்க முடியும்
பெட்ரோல் கேஸ் விலை உயர்வு குறித்து நிருபர்கள் அவரிடம் கேட்டதற்கு.... இந்த அரசு சாமானிய மக்கள், நடுத்தர, மாதாந்திர ஊழியர்களின் கஷ்டங்களை நினைத்து பார்ப்பதில்லை. அதனால் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்ந்துகொண்டே போகிறது என கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News