80-வது பிறந்தநாளில் ரசிகர்கள் வாழ்த்து மழையில் அமிதாப்பச்சன்- Amitabh Bachchan wishes fans on his 80th birthday

 Amitabh Bachchan wishes fans on his 80th birthday

Actor-Amitabh-Bachan-80th-birthday

பிக் பீ, மற்றும் ஷாஹென்ஷா என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் அமிதாப் பச்சன் இன்று தனது 80ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

1969-ம் ஆண்டில் வெளிவந்த `சாட் ஹிந்துஸ்தானி’ என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கினார் அமிதாப் பச்சன். இவர் நடித்த முதல் திரைப்படத்திலேயே சிறந்த புதுமுக நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார்.

image

முதல்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஆனந்த், ப்யார் கீ கஹானி, பர்வானா, க்குட்டி, ப்யார் கா கர் போன்ற திரைப்படங்களில் நடித்தார். இதில், ஆனந்த் திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதை பெற்றார்.

image

பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் மற்றும் இந்திய அரசின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார் அமிதாப் பச்சன். நடிகர், தயாரிப்பாளர், பாடகர், தொகுப்பாளர் எனப் பல்வேறு தளங்களில் தொடர்ச்சியாகப் பணிபுரிந்து வருகிறார்.

image

இந்நிலையில் அமிதாப் பச்சனின் 80ஆவது பிறந்த நாள் இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அமிதாப்பின் பிறந்த நாளையொட்டி, முன்னணித் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் ரசிகர்களும் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.

Thanks.

puthiyathalaimurai.

Post a Comment

Previous Post Next Post