
முன்விரோதம் காரணமாக இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி மேலகுப்பம் கிராமத்தில் வசிக்கும் சக்திவேல் (45), இளங்கோ (44) ஆகிய இருவரும் மேல குப்பத்தில் உள்ள வீரன் கோயில் அருகே பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத ஆறு பேர் கொண்ட கும்பல், என் தம்பியை கொன்றது நீங்கள் தானே என சொல்லி இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதில், பலத்த காயமடைந்த இளங்கோவன் தப்பியோடிய நிலையில், சக்திவேலை அருகில் உள்ள வனப் பகுதிக்குள் தூக்கிச் சென்று சரமாரியாக தாக்கியதில் சக்திவேல் உயிரிழந்தார். இதையடுத்து தப்பியோடிய இளங்கோவன் தெர்மல் காவல் துறைக்கு அளித்த தகவலின் பேரில் சக்திவேலின் உடலை மீட்டு 6 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Tags:
News