யாத்திரை மூலம் மலிவான விளம்பரத்தை தேடுகிறார்கள் - மத்திய அமைச்சர் விகே.சிங்.

ஜோடோ யாத்திரை மூலம் மலிவான விளம்பரத்தை தேடுகிறார்கள் என மத்திய அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜக குளச்சல் சட்டமன்ற தொகுதி சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் வி.கே.சிங் கலந்து கொண்டு பேசினார்.

image

இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பா ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வி.கே.சிங் பேசும்போது...

image

ஜோடோ யாத்திரை மூலம் மலிவான விளம்பரத்தை தேடுகிறார்கள். காங்கிரஸ் தொண்டர்கள் இந்தியாவை உடைக்க முயல்கிறார்களா? அல்லது ஒன்றிணைக்க முயல்கிறார்களா? இந்தியா ஏற்கனவே ஒற்றுமையாக உள்ளது. அவர்கள் செய்யும் அனைத்தையும் மக்கள் நிராகரிப்பார்கள் என்றும் கூறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post