உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய பெற்றோர்

விபத்தால் மூளைச்சாவு அடைந்த 13 வயது சிறுவனின் உடல் உறுப்புகளை பெற்றோர் தானமாக வழங்கினர்.

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த சின்னம்பள்ளி குப்பத்தைச் சேர்ந்த தையல் தொழிலாளி சதீஷ் - நந்தினி தம்பதியினரின் இளைய மகன் துர்கா பிரசாந்த் (13). இவர், கடந்த ஞாயிற்றுக் கிழமை (25.09.2022) மாலை பாக்கம் பகுதியில் உள்ள சிவன் கோவிலுக்குச் சென்றுவிட்டு மிதிவண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

image

அப்போது சிறுவனின் மிதிவண்டி மீது மது போதையில் சென்ற அடையாளம் தெரியாத நபரின் இருசக்கர வாகனம் மோதியதாக கூறப்படுகிறது. இதில், தலையில் பலத்த காயமடைந்த சிறுவன் துர்கா பிரசாந்த்தை மீட்டு அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

image

இந்நிலையில் நேற்று, மூளைச்சாவு அடைந்துள்ளார். இதனை அடுத்து அவரது பெற்றோரின் அனுமதியோடு சிறுவனின் கல்லீரல், ஒரு சிறுநீரகம் சென்னை எம்.ஜிஎம் மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் சென்னை ராமசந்திரா மருத்துவமனைக்கும் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post