தமிழ்நாடு: எத்தனை யூனிட்டுக்கு எவ்வளவு மின்கட்டண உயர்வு? - முழு விவரம்

தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மின் கட்டணத்தில் மாற்றங்கள் செய்யப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்திருந்தார். அதன்படி பொதுமக்கள் கருத்து கேட்கப்பட்ட நிலையில் புதிய மின் கட்டணம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதே நேரத்தில், அனைத்து வீட்டு மின்நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்படுள்ளது.

2 மாதங்களுக்கு மொத்தம் 200 யூனிட் வரை பயன்படுத்தும் 63.35 லட்சம் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு (26.73 சதவீதம்) மாதம் ஒன்றுக்கு ரூ.27.50-ம், 300 யூனிட்டுகள் வரை மின்நுகர்வு செய்யும் 36.25 லட்சம் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு (15.30 சதவீதம்) மாதம் ஒன்றுக்கு ரூ.72.50-ம், 400 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 18.82 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (7.94 சதவீதம்) மாதம் ஒன்றுக்கு ரூ.147.50-ம், 500 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 10.56 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு  (4.46 சதவீதம்) மாதம் ஒன்றுக்கு ரூ.297.50-ம், 600 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 3.14 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (1.32 சதவீதம்) ரூ.155-ம் மட்டுமே கட்டணத்தை உயர்த்தப்பட்டுள்ளது.

image

மேலும், தற்போது குடிசை விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிப்பாட்டு தலங்கள் முதலிய மின் கட்டண பிரிவுக்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும். 2 மாதங்களுக்கு மொத்தம் 700 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 1.96 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (0.83 சதவீதம்) மாதம் ஒன்றுக்கு ரூ.275-ம், மொத்தம் 800 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 1.26 லட்சம் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு (0.53 சதவீதம்) மாதம் ஒன்றுக்கு ரூ.395-ம், 900 யூனிட்டுகள் வரை நுகர்வு செய்யும் 84 ஆயிரம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (0.35 சதவீதம்) மாதத்துக்கு ரூ.565-ம் உயர்த்தப்பட்டுள்ளது.

100 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் குறைக்கப்பட்ட மின்சாரத்துக்குரிய மின் மானியத்தை நுகர்வோர் விரும்பும் பட்சத்தில் "மின் மானியத்தை தாமாக விட்டுக் கொடுக்கும்" திட்டம் மூலம் அமலாகிறது.

image

முன்னதாக, மின் கட்டண உயர்வு குறித்த கருத்துக்களை தெரிவிக்கலாம் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, மின்சார வாரிய இணையதளங்களில் மின்சார கட்டண விவரங்கள் வெளியிடப்படும் என்றும் மின் கட்டண உயர்வு தொடர்பான கருத்துகளை தெரிவிக்க 30 நாட்கள் காலஅவகாசம் வழங்கியும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்திருந்தது.

அதன்படி பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்ட நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த புதிய மின்கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் எட்டு ஆண்டுகளுக்கு பின்னர் மின் கட்டணம் உயர்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

-ரமேஷ்

இதையும் படிக்க: மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டதன் பின்னணி இதுதானாம்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post