`காவிரி கரையோர மக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுங்க’ - ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவு

தென்மேற்கு பருவமழை கடந்த மூன்று மாதங்களில் இயல்பை விட அதிகம் பெய்துள்ள நிலையில், காவரி கரையோரம் வசிக்கும் மக்களை பாதுகாத்திட தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் வரை இயல்பைவிட 87 விழுக்காடு கூடுதல் மழை பெய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். காவிரி ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாத்திட தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு காவிரி ஆற்றுப்படுகை அமைந்துள்ள அனைத்து மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

image

ஈரோடு, நாமக்கல், திருச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களில் கண்காணிப்பு அதிகாரிகள் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார். மேலும் இந்த நான்கு மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்புப் படை குழுவினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மழை வெள்ள பாதிப்பு புகார்களை 1070, 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்கள் வாயிலாகவும், வாட்ஸ்அப் மூலமும் தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post