சென்னை: நண்பருடன் பைக்கில் வீட்டிற்குத் திரும்பிய மருத்துவ மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்

பூந்தமல்லி அருகே கல்லூரியில் இருந்து வீட்டிற்குச் சென்ற மருத்துவக் கல்லூரி மாணவி மீது லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் மின் வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற நிலையில், தற்போது பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் சுபிதா (21), வேலப்பன்சாவடியில் உள்ள மருத்துவக் கல்லூரியில் நான்காம் ஆண்டு பிசியோதெரபி படித்து வந்தார்.

image

இந்நிலையில், நேற்று தேர்வுகள் முடிந்த நிலையில் கல்லூரியில் நண்பர்களுடன் விழா கொண்டாடிவிட்டு தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் சர்வீஸ் சாலையில் சென்றபோது பின்னால் வந்த லாரி மோதியதில் நிலை தடுமாறு இருவரும் கீழே விழுந்துள்ளனர்.

image

இதில், சுபிதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் கவுசல்யா, உயிரிழந்த மாணவி சுபிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் தன்ராஜ் (27), என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post