3 people including 2 teachers were suspended

ஆர்.எஸ்.மங்கலம் அருகே 6 ஆம் வகுப்பு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் இரண்டு ஆசிரியர்கள் உட்பட 3 பேரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஏ.மணக்குடி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஆறு, ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு அறிவியல் கேள்வித்தாள் தேர்வுக்கு முன்பே வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியது.

image

இந்த நிலையில் பள்ளியில் பணியாற்றும் ஜெயக்குமார் மற்றும் குமாரவேல் ஆகிய இரு ஆசிரியர்கள், தலைமையாசிரியர் மீதுள்ள கருத்து வேறுபாடு காரணமாக அறிவியல் பாட கேள்வித்தாளை லீக் அவுட் செய்தது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து இரண்டு ஆசிரியர்களையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து பள்ளி தலைமையாசிரியர் மீனம்பர், கவனக் குறைவாக செயல்பட்டதை அடுத்து அவரையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post