சென்னை: லாரியோடு இரும்புத் தகடுகள் கடத்தல்; பாஜக பிரமுகர் உட்பட 4 பேர் கைது

கர்நாடகாவில் இருந்து லாரியில் ஏற்றி வந்த ₹35 லட்சம் மதிப்பிலான 29 டன் இரும்புத் தகடுகளை லாரியுடன் கடத்தியதாக பாஜக பிரமுகர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் இருந்து இரும்புத் தகடு உருளைகளை கண்டெய்னர் லாரியில் ஏற்றிக் கொண்டு சென்னைக்கு வந்துள்ளனர். இதையடுத்து தனியார் நிறுவனத்திடம் பொருட்களை ஒப்படைக்காமல் ஒட்டுநர் செல்வம் என்பவரின் செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால், சந்தேகம் அடைந்த சென்னை மணலியில் உள்ள தனியார் கிடங்கின் மேலாளர் ரவிக்குமார் என்பவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

image

இந்த புகாரின் அடிப்படையில் மணலி காவ துறையினர் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அப்போது இரும்புத் தகடுகளை லாரியில் ஏற்றிக் கொண்டு வந்த லாரி ஓட்டுநர் செல்வம் என்பவர், லாரியில் உள்ள ஜி.பி.ஆர்.எஸ் கருவியை துண்டித்து விட்டு மணலி அடுத்த காட்டூர் பகுதியில் லாரியை நிறுத்தி விட்டு 29 டன் இரும்புத் தகடு உருளைகளை திருடியது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து பிச்சாண்டி மற்றும் அவரது நண்பர்கள் மூலமாக பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினரான பாரதிராஜா என்பவரின் மூலமாக விற்பனை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து சந்தோஷ் (34), பிச்சாண்டி (37), சுரேஷ்குமார் (36), பாரதிராஜா (43), ஆகிய 4 பேரையும் கைது செய்து மணலி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்தனர்.

image

அப்போது, கர்நாடக மாநிலத்தில் இருந்து லாரியில் கொண்டு வரப்பட்ட ஸ்டீல் தகடுகளை காட்டூர் பகுதியில் உள்ள ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து தகடுகளை திருடி பாரதிராஜா மூலமாக 12 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ததும் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post