உலக நுரையீரல் புற்றுநோய் நாள் 2022

உலக நுரையீரல் புற்றுநோய் நாள் 2022

ஆகஸ்ட் 1ம் தேதியான இன்று உலக நுரையீரல் புற்றுநோய் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. நுரையீரல் புற்றுநோயால் உயிரிழப்போரின் எண்ணிக்கையை குறைக்கும் விதமாக இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி இந்த நுரையீரல் புற்றுநோயால் உலகளவில் பலரும் பாதிக்கப்படுகிறார்கள் என்று அறியப்படுகிறது. கடந்த 2020ம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் 18 லட்சம் பேர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

20ம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரையில் நுரையீரல் புற்றுநோயால் வெகுசிலரே பாதிக்கப்பட்டிருந்ததாகவும், இரண்டாம் உலகப்போருக்கு பிறகே உலகளவில் இது மிகப்பெரிய நோயாக உருவானதாகவும் கூறப்பட்டுள்ளது.

image

நுரையீரல் புற்றுநோய் வர புகைப்பிடித்தல், நச்சு வாயுக்களை சுவாசிப்பது, ஆரோக்கியமில்லாத வாழ்க்கைமுறை, உடலுக்கு தேவையில்லாத உணவுகளை உட்கொள்ளுதல் போன்றவை முக்கிய காரணிகளாகும். மேலும், குடும்பத்தில் எவருக்கேனும் புற்றுநோய் இருந்தாலோ, COPD போன்ற நுரையீரல் தொற்று இருந்தாலோ இந்த நோய் வர காரணமாக இருக்குமாம்.

இதனை சைலன்ட் கில்லர் என்றும் மருத்துவர்கள் அழைக்கிறார்கள். ஏனெனில், நுரையீரல் புற்றுநோயின் ஆரம்ப கட்டங்களில் சில அறிகுறிகள் உள்ளன. அது நோய் முற்றிய பிறகே தெரியவரும்.

தொடர்ந்து காய்ச்சல், இருமும்போது ரத்தம், மூச்சுத் திணறல், மார்பு பகுதியில் அசௌகரியம், திடீர் எடை இழப்பு மற்றும் எலும்பு வலி ஆகியவை நுரையீரல் புற்றுநோயின் சில தவிர்க்க முடியாத அறிகுறிகளாக உள்ளது. ஆரம்பகால நோயறிதல் மற்றும் சிகிச்சையைப் பற்றி மக்கள் அறிந்திருப்பது முக்கியம்.

image

காலை எழுந்தவுடன் காபி, டீ குடிக்கும் போது, தொடர் வேலைக்குப் பிறகு, குடும்பத்தில் ஏற்பட்ட சண்டைக்கு பிறகு அல்லது வேறு பல சூழ்நிலைகளில் உங்கள் மனம் புகைப்பிடிக்க வேண்டும் என்று தோன்றும் போது நன்றாகதான் இருக்கும். புகையிலையின் போதைப்பொருளான நிகோடினை உள்ளிழுக்கும் போது டோபமைனை வெளியிடுவதால் இனிமையானதாகவும் இருக்கும். இதனால் மூளையின் நிகோடின் ஏற்றி அதிகரித்து அதன் கட்டமைப்பில் மிகப்பெரிய மாற்றத்தையே நிகழ்த்துகிறது.

புகைப்பிடிப்பதால் தற்காலிகமாக மன அழுத்தம் குறையலாம். ஆனால் அது வாழ்நாள் முழுவதற்கும் ஒத்துவராது என்பதை நுரையீரல் புற்றுநோய் உணர்த்தும் பாடமாக இருக்கிறது. ஆகவே ஸ்ட்ரெசை குறைக்க புகைப்பிடிப்பதற்கு பதிலாக serotonin and dopamine-களை ஏற்படுத்துவதற்கு நிகோடின் நிறைந்த டார்க் சாக்லேட்டுகளை உட்கொள்ளலாம். இதனால் நுரையீரலுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டிடாது.

சிகரெட் பழக்கத்தை எதிர்த்துப் போராடுவோர் சர்க்கரை இல்லாத சுயிங்கம் அல்லது மிட்டாய்களை மெல்லலாம். மாறாக, பச்சையாக கேரட், பாதாம், ஃபாக்ஸ்நட்ஸ் அல்லது சூரியகாந்தி விதைகளை சாப்பிடலாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

உலக நுரையீரல் தினத்தையொட்டி, புகையிலை பொருட்களை எடுதுக்கொள்வதை, புகைப்பிடிப்பதை நிறுத்தி, தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். வழக்கமான நுரையீரல் புற்றுநோய் பரிசோதனையைப் மேற்கொள்ளுங்கள். மக்களிடையே விழிப்புணர்வை பரப்புங்கள். இ-சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களை தேடும் சிறார்களின் அணுகலை குறையுங்கள். நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் மற்றவர்களிடம் புகைபிடிப்பதை நிறுத்துவதற்கான உங்கள் எண்ணத்தை தெரிவியுங்கள்.


from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post