மூன்றில் 2 குழந்தைகளுக்கு முறையாக தாய்ப்பால் கொடுக்கப்படுவதில்லை.. ஷாக் கொடுக்கும் தகவல்

மூன்றில் 2 குழந்தைகளுக்கு முறையாக தாய்ப்பால் கொடுக்கப்படுவதில்லை

6 மாதம் வரை குழந்தைகளுக்கு கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படும் நிலையில், மூன்றில் 2  குழந்தைகளுக்கு முறையாக தாய்ப்பால் கொடுக்கப்படுவதில்லை என கவலை தெரிவித்துள்ளது உலக சுகாதார அமைப்பு.

பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் அளிப்பதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலக சுகாதார அமைப்பால் ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் வாரம் உலக தாய்ப்பால் விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் அவசர நிதியம் மற்றும் உலக சுகாதார அமைப்பு இணைந்து வெளியிட்ட ஒரு கூட்டறிக்கையில், ''உலகம் முழுவதும் லட்சக்கணக்கான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுகளுடனும் உள்ளனர்.

தாய்ப் பாலில் இருந்துதான் குழந்தைக்கான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கின்றன. குழந்தை பிறந்தது முதல் 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். பச்சிளம் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் அருமருந்து தாய்ப்பால்தான். தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள், நோய்க்கிருமிகளிடம் இருந்து சிறப்பான பாதுகாப்பு கிடைக்கப்பெறுவார்கள்.

image

தாய்ப்பால் சேய்க்கு மட்டுமல்ல, தாய்க்கு செய்யும் நன்மைகள் பல. தாய்ப்பால் கொடுப்பதால் ஆக்ஸிடோசின் ஹார்மோன் சுரக்கிறது. அதனால், தாயின் கர்ப்பப்பை எளிதாகச் சுருங்கி ரத்தப்போக்கைக் குறைப்பதுடன், கர்ப்பப்பை மீண்டும் அதன் பழைய நிலையை அடைய உதவுகிறது. பதற்றம், மன அழுத்தம், எதிர்மறை மனநிலை, ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

image

6 மாதம் வரை குழந்தைகளுக்கு கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படும் நிலையில், மூன்றில் 2  குழந்தைகளுக்கு முறையாக தாய்ப்பால் கொடுக்கப்படுவதில்லை. இரண்டு தசாப்தங்களாக இந்த விகிதம் மேம்படவில்லை. முதல் 6 மாதங்களுக்குத் தாய்ப்பால் பெறும் குழந்தைகளின் எண்ணிக்கையை 2025ஆம் ஆண்டிற்குள் 50% உயர்த்துவதே உலக சுகாதார நிறுவனத்தின் தற்போதைய இலக்கு.  ஆனால் தற்போது உலக அளவில் முதல் 6 மாதங்களுக்குத் தாய்ப்பால் பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை 44 சதவீதமாக உள்ளது. 23 மாதங்கள் வரை அனைத்து குழந்தைகளுக்கும் தாய்ப்பால் கிடைக்கப்பெற்றால் ஒவ்வொரு ஆண்டும்  5 வயதுக்குட்பட்ட சுமார் 8,20,000 குழந்தைகளின் உயிர்களை காப்பாற்ற முடியும்'' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post