
சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவின் புகைப்படத்தை வாட்ஸ்அப் செயலியில் டி.பி.யாக வைத்து மோசடி முயற்சி நடைபெற்றுள்ளது.
மேயர் பிரியா வாட்ஸ்-அப்பில் செய்தி அனுப்புவதை போன்று, சென்னை மண்டல அதிகாரிகள் 3 பேரிடம் அமேசான் கிஃப்ட் கார்டு மூலமாக அடையாளம் தெரியாத நபர்கள் பணம் கேட்டுள்ளனர். இது குறித்து மேயர் பிரியா தரப்பில் பெரியமேடு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அண்மையில் கோவை மேயர் மற்றும் பல்வேறு மாவட்ட ஆட்சியர்களின் புகைப்படங்களை பயன்படுத்தியும் இது போன்று மோசடி முயற்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Tags:
News