எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 6 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை

தமிழகத்தை சேர்ந்த ஆறு மீனவர்கள் கைது செய்துள்ள இலங்கை கடற்படையினர் ஒரு விசைப்படகை பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த ஒரு விசைப்படகில் 6 மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் விசைப் படகையும் அதிலிருந்த ஆறு மீனவர்களையும் கைது செய்து மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டு செல்லும் பணிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

image

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட ஆறு மீனவர்களும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்களை தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவதால் மீனவர்கள் மத்தியில் கவலை ஏற்படுத்தி வருகின்றது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post