சாப்பிடுவதற்கு மட்டுமல்லாமல் முக அமைப்பு மற்றும் பேசுவதற்கும் பற்கள் மிகமிக அவசியம். அதனாலேயே பற்களை பாதுகாப்பதும் மிகவும் அவசியம். தொடர்ந்து பற்களை பயன்படுத்துவது பற்சிதைவுக்கு வழிவகுக்கும். பற்சுத்தத்தை சிதைக்கும் சில பழக்கங்களை மாற்றுவது அவசியம்.
அதீத சர்க்கரை உணவுகள்: பொதுவாக நம்முடைய வாயில் ஏராளமான பாக்டீரியாக்கள் உள்ளன. அவற்றில் சில பாக்டீரியாக்கள் சர்க்கரை உட்கொண்டால், பற்களின் வெளிப்புற பாதுகாப்பு அடுக்கை சிதைக்கக்கூடிய, தீங்கு விளைவிக்கிற அமிலத்தை உருவாக்குகிறது.
வறண்ட வாய்: வாய் சுகாதாரமாக இருப்பதற்கு உமிழ்நீர் இன்றியமையாதது. எப்படியென்றால் உமிழ்நீரானது சாப்பிட்டபிறகு வாய்க்குள் எஞ்சியிருக்கிற மற்றும் ஒட்டியிருக்கிற பொருட்களை இயற்கையாகவே கழுவி சுத்தம் செய்ய உதவுகிறது. வாய் வறண்டு இருந்தால் இந்த செயல்பாட்டில் தொய்வு ஏற்பட்டு பற்சிதைவு ஏற்படுகிறது.
ஃபுளூரைடு வெளிப்பாடு இல்லாமை: ஃபுளூரைடுகள் அமிலங்கள் மற்றும் சிதைவுக்கு எதிர்ப்பை அதிகரிப்பதன் மூலம் பற்களைப் பாதுகாப்பாக வைக்கிறது. ஃபுளூரைடுகள் பற்பசைகளில் இருக்கின்றன. மேலும் ஃபுளூரைடு நிறைந்த தண்ணீர் பாட்டில்களும் விற்கப்படுகின்றன.
தேவையில்லாத செயல்களுக்கு பற்களை பயன்படுத்துதல்: சிப்ஸ் பாக்கெட்டுகளை பிரிக்க, பாட்டில் மூடிகளை திறக்க பற்களை பயன்படுத்துவதும் பற்சிதைவுக்கு வழிவகுக்கும். மேலும் இவை பற்களுக்கு ஆபத்தை விளைவிக்கும்.
எப்போது மருத்துவரை அணுகவேண்டும்?
பற்களை முறையாக பராமரித்தாலும்கூட சிலருக்கு பற்சிதைவு மற்றும் பற்சொத்தை போன்ற பிரச்னைகள் ஏற்படும். எனவே மிக மோசமான விளைவுகளை தவிர்க்க பற்களின் வாழ்நாளை கூட்ட முறையாக பல் மருத்துவரை அணுகுவது அவசியம்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News