மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் தனது முகம் வீங்கியதாக கன்னட நடிகை சுவாதி புகார் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு ஜே.பி. நகரை சேர்ந்த நடிகை சுவாதி, சில கன்னட திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.கடந்த 20 நாட்களுக்கு மேலாக பல் வலியால் அவதிப்பட்டு வந்த சுவாதி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். அங்கு, அளிக்கப்பட ஊசியை செலுத்திய பின், சுவாதியின் முகம் திடீரென வீங்கியுள்ளது.
இதனால் வீட்டைவிட்டு வெளியே வராமல் இருந்துள்ளார். இந்நிலையில், தவறான மருத்துவ சிகிச்சையால் மருத்துவமனை நிர்வாகம் தனது முகத்தை சிதைத்துவிட்டதாக சுவாதி கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் சுவாதி கூறியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Tags:
News