சோதனை முயற்சியாக வழங்கப்பட்ட மருந்தின் மூலம் புற்றுநோயிலிருந்து மீண்டதை அறிந்த நோயாளிகளும், அவர்களது குடும்பத்தினரும் மகிழ்ச்சியில் கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தனர்.
அமெரிக்காவின் நியூயார்கில் நியூயார்க்கில் உள்ள ஒரு புற்றுநோய் மையத்தில் மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 12 நோயாளிகளுக்கு சோதனை முயற்சியாக 'டோஸ்டர்லிமாப்' என்ற மருந்து தரப்பட்டது. மனித உடலில் மாற்று ஆன்டிபாடிகளாக செயல்படும் இந்த மருந்து 3 வாரங்களுக்கு ஒருமுறை என்ற வீதத்தில் 6 மாதங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது. இதன் முடிவில் புற்றுநோய் முற்றிலுமாக குணமானது தெரிய வந்திருக்கிறது. இதனை என்டோஸ்கோபி, எம்ஆர்ஐ ஸ்கேன் மூலம் மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
இதுகுறித்து மருத்துவர்கள் தரப்பில் கூறும்போது, “மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இந்த 12 நோயாளிகளும் இதற்கு முன்னர் பல்வேறு சிகிச்சைகளை எடுத்துக்கொண்டவர்கள். அதன் பின்னரே அவர்களுக்கு இந்த 'டோஸ்டர்லிமாப்' மருந்து அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சையிலேயே அவர்கள் முழுமையாக குணமாகினர். அவர்களுக்கு மேற்கொண்டு சிகிச்சை தேவையில்லை. அனைத்து நோயாளிகளுக்கு புற்றுநோய் முழுமையாக குணமாகியுள்ளது'' என்றனர்.
தாங்கள் புற்றுநோயிலிருந்து மீண்டதை அறிந்த நோயாளிகளும், அவர்களது குடும்பத்தினரும் மகிழ்ச்சியில் கண்ணீர்மல்க நன்றி தெரிவித்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மருத்துவ வரலாற்றில் முதன் முறையாக இத்தகைய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. எனினும், தொடர்ந்து பரிசோதனைகள் நடத்திய பின்னரே 'டோஸ்டர்லிமாப்' மருந்துகள் பொதுவெளிக்கு வரும் என்று மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாம்: காய்ச்சல் பற்றிய வதந்திகள் - இந்த தவறுகளை தவிர்த்திடுங்கள்!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News