சென்னை: பைக்கில் பின்னால் அமர்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்... மீறினால் அபராதம்

விபத்துகளை குறைக்கும் விதமாக சென்னையில் இருசக்கர வாகனங்களில் பின்னே அமர்ந்து பயணிப்பவரும் தலைக்கவசம் அணியவேண்டும் என்ற உத்தரவு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

மே 1 முதல் மே 15 ஆம்தேதி வரை நடந்த இருசக்கர வாகன விபத்துகளில் 98 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் தலைக்கவசம் அணியாமல் பயணித்ததால் 80 வாகன ஓட்டிகளும், பின்னிருக்கை பயணிகள் 18 பேரும் இறந்ததாக புள்ளிவிவரம் கூறுகிறது. இதையடுத்து இருசக்கர வாகன  ஓட்டிகளும், பின்னிருக்கை நபரும் தலைக்கவசம் அணிவதை கண்காணிக்க சிறப்பு வாகனத் தணிக்கை நடத்த போக்குவரத்து காவல்துறை திட்டமிட்டுள்ளது.

image

சென்னை முழுவதும் சுமார் 200 சோதனை சாவடிகள் அமைத்து காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் தலைக்கவசம் அணியவில்லையெனில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட உள்ளது.

இதையும் படிக்கலாம்: திருப்பூர்: மர்மமான முறையில் உயிரிழந்த 80க்கும் மேற்பட்ட ஆடுகள்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post