புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலில் பாத யாத்திரையாக வந்த பக்தர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோயிலில், வரும் 12-ஆம் தேதி வைகாசி விசாக திருவிழா தொடங்குகிறது. இதையொட்டியும் கோடை விடுமுறை என்பதாலும் கோயிலில் நாள்தோறும் அதிக அளவில் கூட்டம் காணப்படுகிறது. நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் அதிகாலை முதலே வழக்கத்தை விட அதிக கூட்டம் இருந்தது. இந்நிலையில், கோயில் நடைமுறையில் இருந்த 4 தரிசன வரிசைகள், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஏற்கெனவே 2 வரிசைகளாக குறைக்கப்பட்டன. இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து செந்தில் ஆண்டவரை தரிசித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து பாதை யாத்திரையாக வந்த பக்தர்கள் சண்முக விலாசம் மண்டபம் வழியே கோயிலுக்குள்ளே செல்ல முற்பட்டனர். அவர்களை கோயில் ஊழியர்கள் தடுத்ததால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவல்துறையினர், பக்தர்களை சமாதனப்படுத்தி பொது தரிசன வரிசைக்கு அனுப்பினர்.
இதையும் படிக்கலாம்: கோலாகலமாக நடைபெற்றது தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News