'மோதிக்கொண்ட கல்லூரி பேருந்து - தனியார் பேருந்து..'. பதைபதைக்கவைக்கும் சிசிடிவி காட்சிகள்

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே நேற்று தனியார் பேருந்தும் கல்லூரி பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து குறித்த சிசிடிவி காட்சி தற்பொழுது வெளியாகியுள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து நேற்று மாலை சங்ககிரி செல்லும் சாலையில் கோழிப்பண்ணை என்ற இடத்தில் சங்ககிரியில் இருந்து எடப்பாடி நோக்கி சென்ற கல்லூரி பேருந்தும், எடப்பாடியில் இருந்து திருச்செங்கோடு நோக்கி சென்ற தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கல்லூரி பேருந்தில் பயணம் செய்த மாணவ மாணவிகள் சுமார் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயமடைந்தனர். அதேபோன்று தனியார் பேருந்தில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

தொடர்புடைய செய்தி: உருட்டுக் கட்டையால் தாக்கிக்கொண்ட கல்லூரி மாணவர்கள் விவகாரத்தில் மூவர் கைது

image

இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. இந்த காட்சியில் சாலை விதிகளை மதித்து சரியாக சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து மீது, சாலை விதிகளை மீறி அதிவேகமாக வந்த கல்லூரி பேருந்து தனியார் பேருந்து மீது மோதியுள்ளது தெரிகிறது. இந்த விபத்து நடந்த பரபரப்பு சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

மாணவ மாணவிகளை ஏற்றிக் கொண்டு செல்லும் பள்ளி கல்லூரி வாகனங்கள் பாடல் ஒலித்த படியே அதிவேகமாக செல்வதே இதுபோன்ற விபத்துக்கு காரணமாக இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post