நடனமாடியபடி ஆசிரியரை தாக்க முயன்ற தனியார் பள்ளி மாணவர்கள்: குமரியில் அதிர்ச்சி சம்பவம்

பள்ளியாடி அருகே தனியார் பள்ளியில் பாடம் நடத்தும்போது நடனமாடி ஆசிரியரை தாக்க முயன்ற மாணவர்கள் வீடியோ வைரலான நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக மாணவர்கள் வகுப்பறையில் நடனமாடுவது ஆசிரியர்களை தாக்க முயல்வது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைபள்ளி ஒன்றில் கடந்த வியாழன் அன்று மாணவர்கள் வகுப்பறையில் ஆட்டம் போட்டு ஆசிரியரை தாக்க முயலும் வீடியோ வைரலாகி வருகிறது.

image

இந்த பள்ளியில் 11-ம் வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தி கொண்டிருக்கும் போது ஒரு மாணவர் வாசலில் நின்று நடனமாடுவதும் வேறு காட்சியில் ஆசிரியர் பாடம் நடத்தும் போது மேஜை மேல் ஏறி நின்று ஆடுவதும் ஒரு மாணவர் டெஸ்க்கை தூக்கிக் கொண்டு ஆசிரியரை தாக்க செல்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

மீயூசிக் பின்னணியில் இந்த வீடியோவை யாரோ சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளனர். ஒரு மாணவவனை ஆசிரியர் எச்சரிக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.

image

இதுவரை அரசு பள்ளி மாணவர்கள் செய்யும் சேட்டைகள் குறித்த வீடியோக்கள் மட்டுமே சமூக வலைதளங்களில் வலம்வந்த நிலையில் தற்போது அரசு உதவி பெறும் தனியார் பள்ளியிலும் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இது பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இச்சம்பவம் குறித்து போலீசாரும் மாவட்ட கல்வி அதிகாரியும் நேற்று பள்ளியில் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post