தஞ்சை: ஆடிட்டரை வெட்டிக் கொலை செய்த மர்ம கும்பல் - போலீசார் விசாரணை

தஞ்சையில் ஆடிட்டரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் கரந்தை சேர்வைக்காரன் தெருவைச் சேர்ந்தவர் மகேஸ்வரன் (45). ஆடிட்டரான இவர், தனது வீட்டில் இருந்தபோது, கரந்தை பகுதியைச் சேர்ந்த சிலர் வீடு புகுந்து அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த இவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேற்கு காவல்நிலைய போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

image

முதல் கட்ட விசாரணையில் கரந்தை சந்தை அருகே உள்ள மாநகராட்சி கழிப்பறையை டெண்டர் எடுப்பதில் மகேஸ்வரனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் போட்டி இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக மகேஸ்வரன் கொலை செய்யப்பட்டார் எனக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post