”ஒற்றுமையுடன் போராடி தொழிலாளர்கள் உரிமைகளை வென்றநாள்” - ஒபிஎஸ், திருமா மே தின வாழ்த்து

உழைப்பின் மேன்மையை உலகிற்கு எடுத்துச் சொல்லும் வகையில் மே 1ஆம் தேதி தொழிலாளர் தினமான உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் ட்விட்டரில் வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் போராடி உரிமைகளை வென்றெடுத்த திருநாளாகவும், உழைப்பின் மேன்மையை உலகிற்கு எடுத்துரைத்த உயர் தினமாகவும் திகழும் மே தினத்தில் உலகெங்கும் வாழும் தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

image

உலக தொழிலாளர் தினமான மே தினத்தை கொண்டாடும் கரத்தாலும், கருத்தாலும் உழைக்கும் தமிழக உழைப்பாளர்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு புரட்சிகர வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது. தோழர் சிங்காரவேலர் ஏற்றிவைத்த மே தின செங்கொடி நாடெங்கிலும் பட்டொளி வீசி பறக்கட்டும் என கே.பாலகிருஷ்ணன் தனது மே தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

image

உலகமே கொண்டாடும் உழைப்பாளர் நாள், உழைப்புச் சுரண்டலுக்கு எதிராகப் போராடி உரிமையை வென்றெடுத்த தொழிலாளர்களின் வெற்றித் திருநாள். இந்நாளில் தொழிலாளர்களின் நலன்களுக்கு எதிரான 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை திரும்பப்பெற இந்திய அரச வலியுறுத்துவோம். மே நாள் வாழ்த்துகள் என தொல்.திருமாவளவன் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post