
தமிழ்நாட்டில் மே 3-ஆம் தேதி, அதாவது நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தலைமை காஜி முப்தி முகமது சலாவுதீன் அயூப் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஷவ்வல் பிறை ஞாயிறன்று தென்படாததால் ரம்ஜான் பண்டிகை வரும் செவ்வாய் கிழமை கொண்டாடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அரபு நாட்டின் பிறை பார்க்கும் குழு பிறையைப் பார்த்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட பின்னரே ரமலான் மாதத்தின் தொடக்கம் மற்றும் முடிவின் சரியான தேதி அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில் அரபு நாடுகளில் கடந்த மாதம் 2ஆம் தேதி நோன்பு தொடங்கியது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Tags:
News