தேர்தலில் சிறப்பான பணி... திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு 1 பவுன் மோதிரம் வழங்கிய அமைச்சர்

சட்டமன்ற, உள்ளாட்சி தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு 1 பவுன் தங்க மோதிரம் வழங்கியுள்ளார் அமைச்சர் கீதாஜீவன்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டம் காய்கறி மார்க்கெட் அருகில் திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் சட்டமன்ற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய திமுக விளாத்திகுளம் எம்.எல்.ஏ.ஜி.வி.மார்க்கண்டேயன் கட்சி நிர்வாகிகளின் சார்பில் அமைச்சர் கீதாஜீவன் 1 பவுன் தங்க மோதிரம் வழங்கினார்.

image

இதையெடுத்து அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், “அகில இந்திய அளவில் நம்பர் ஒன் முதல்வராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளார். அந்த அளவிற்கு தமிழகத்தில் நல்லாட்சி புரிந்து வருகிறார். தேர்தலின் போது கொடுத்த 570 வாக்குறுதிகளில் 270 வாக்குறுதிகளை ஆட்சி பொறுப்பு ஏற்ற பின் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார்.

image

மக்கள் இப்போது அதனை அனுபவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி ஏற்பட வேண்டும், மக்களின் வாழ்வாதரம் உயர வேண்டும், தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று முதல்வர் செயல்பட்டு வருகிறார்.

இதையும் படிங்க... 'திமுகவினர் கெடுவைத்தால் அண்ணாமலை கூட்டத்தில் பேச ஆள் இருக்கமாட்டார்கள்' -சுப.வீரபாண்டியன்

image

தமிழக தேர்வுகளில், மாற்றுத்திறனாளிகளுக்கு தனி தேர்வு நடத்தப்பட்டுள்ளது. எல்லா இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. டெல்டா மாவட்டங்களில் மட்டும் 3,300 கோடி ரூபாய்க்கு தூர்வரும் பணிகள் நடைபெற்றுள்ளது. இப்படி இன்னும் ஏராளமான சாதனைகள் செயல்படுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்தார். இந்நிக்ழ்ச்சியில் விளாத்திகுளம் எம்.எல்.ஏ.ஜி.வி.மார்க்கண்டேயன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post