நாட்டில் இந்தி மொழி விவகாரம் மீண்டும் எழுந்துள்ள நிலையில், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வரிகளை குறிப்பிட்டு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கருத்து தெரிவித்துள்ளார்.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எழுதிய 'தமிழுக்கும் அமுதென்று பேர்' என்ற கவிதையில் வரும், 'இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு நேர்' என்ற வரிகளை ஏ.ஆர்.ரகுமான் சுட்டிக்காட்டி பதிவு ஒன்றினை இட்டுள்ளார். தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ழகரம் ஏந்திய தமிழணங்கு என்ற வார்த்தைகளை தாங்கிய போட்டோ ஒன்றை ரகுமான் பதிவிட்டிருக்கிறார். அதில், புரட்சிக்கவிஞரின் வரிகள் இடம்பெற்றுள்ளன.
மத்திய அமைச்சரின் கருத்து காரணமாக நாட்டில் இந்தி மொழி பிரச்னை எழுந்திருக்கும் இந்த சூழலில், ஏ.ஆர்.ரகுமான் சரியான கருத்தை தெரிவித்திருப்பதாக ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பலரும் கூறியுள்ளனர்.
— A.R.Rahman (@arrahman) April 8, 2022
ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக மாநிலங்கள் இந்தி மொழியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்த கருத்தால், நாடு முழுவதும் மாநில மொழிகள் பற்றிய உரிமை, கோடை வெயிலுக்கு இணையாக அனல்பறக்க பேசப்பட்டு வருகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News