சென்னையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீநிவாச திருக்கல்யாண வைபவம் இன்று நடைபெறுகிறது. சென்னை தீவுத்திடலில் இன்று மாலை இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தமிழகத்திற்கான திருமலை திருப்பதி தேவஸ்தான உள்ளூர் ஆலோசனைக்குழுத் தலைவர் சேகர் ரெட்டி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ஸ்ரீநிவாச திருக்கல்யாண வைபவத்துக்கான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். பாதுகாப்புக்காக காவல்துறையினர் மூவாயிரம் பேர், 15 தீயணைப்பு வாகனங்கள், 10 ஆம்புலன்ஸ் வாகனங்கள், மருத்துவக் குழுவினர் தயாராக உள்ளதாகவும் சேகர் ரெட்டி கூறினார்.
திருக்கல்யாண வைபவத்தில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும், அவர்களுக்கு திருமலையில் இருந்து கொண்டுவரப்பட்ட லட்டு பிரசாதம், ஆப்பிள், தண்ணீர் பாட்டில் ஆகியவை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். சென்னையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீநிவாச திருக்கல்யாணம் 14 ஆண்டுகளுக்கு பின் நடப்பது குறிப்பிடத்தக்கது
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News