இலங்கை தமிழர்களுக்கு உதவுமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை தமிழர்களுக்கு, அரிசி, பருப்பு மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை கப்பல் மூலம் அனுப்புவதற்கு தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரகம் மூலம் இந்தப் பொருட்களை விநியோகிக்க உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய முதலமைச்சர், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இந்த கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News