ஜெயலலிதாவின் இல்லத்தை தமிழ்நாடு அரசு கையகப்படுத்தியதை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருந்த நிலையில், அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அதிமுக மேல்முறையீடு செய்துள்ளது.
ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடமையாக்க கையகப்படுத்தியபோது ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் உயர் நீதிமன்றத்தை நாடி இருந்தார்.
2021-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தனி நீதிபதி இந்த வழக்கை விசாரித்து ஜெயலலிதாவின் இல்லத்தை கையகப்படுத்திய தமிழக அரசின் முடிவை ரத்து செய்திருந்தார்.
இதை எதிர்த்து அதிமுக சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு கடந்த ஜனவரி மாதம் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அதிமுக மேல்முறையீடு செய்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Tags:
News