திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்த துர்கா ஸ்டாலின்

திருக்கடையூரில் உள்ள பிரசித்தி பெற்ற அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இக்கோயில் கும்பாபிஷேகம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மார்ச் மாதம் வெகு சிறப்பாக நடைபெற்றது. அது முதல் நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

image

இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்து வழிபட்டார். கோ பூஜை, கஜ பூஜையிலும் கலந்து கொண்ட அவர், விநாயகர், காலசம்ஹாரமூர்த்தி, அம்பாள் உள்ளிட்ட சுவாமிகளை தரிசனம் செய்தும் வழிபட்டார். முன்னதாக கோயிலுக்கு வந்த அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் திமுக நிர்வாகிகள் சிலர் உடன் வந்திருந்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post