மாடு குறுக்கே வந்ததால் விபத்துக்குள்ளான பைக்... மகன் கண்முன்னே தாய் உயிரிழப்பு

மாடு குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனத்தில் பயணித்த 50 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவர் உயிரிழந்திருக்கிறார். விபத்தில் அவரது மகனுக்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தனபாக்கியம் (வயது 50). இவர் தனது மகன் பாலகுமாருடன் இருசக்கர வாகனத்தில் அந்தியூர் அருகே பர்கூர் மலை கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இவர்கள் அந்தியூர் - பர்கூர் ரோட்டில் சென்றபோது செல்லம்பாளையம் அருகே ரோட்டின் குறுக்கே மாடு திடீரென வந்துள்ளது. இதனால் பாலகுமார் தனது இருசக்கர வாகனத்தில் பிரேக் போட்டதில் இருவரும் நிலை தடுமாறி கீழே விழும் சூழல் ஏற்பட்டுள்ளது.  கீழே விழுந்த தனபாக்கியம் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற பாலகுமார் காயங்களுடன் அந்தியூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

image

விபத்து குறித்து தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த அந்தியூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் சம்பவம் குறித்து நேரில் விசாரணை நடத்தினார். இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தில் பலியான தனபாக்கியம் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சமீபத்திய செய்தி: திருத்தணி: 5 மணி நேர மின்வெட்டு.. மெழுகுவர்த்தி ஏற்றி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post