சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் 110 ரூபாயையும், டீசல் ஒரு லிட்டர் 100 ரூபாயையும் தாண்டி விற்கப்படுகிறது.
இன்றைய நிலவரப்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் 75 காசுகள் உயர்ந்து ரூ. 110.9 - க்கு விற்கப்படுகிறது. டீசல் ஒரு லிட்டர் 76 காசுகள் விலை அதிகரித்து ரூ.100.18-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 15 நாட்களில் 13ஆவது முறையாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. 15 நாட்களில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.8.69 -ம், டீசல் லிட்டருக்கு ரூ.8.75-ம் அதிகரித்துள்ளது. இதற்கிடையில், சர்வதேச சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் ஒன்றரை சதவிகிதம் உயர்ந்து 109 டாலரில் வர்த்தகமாகிறது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்றே ஒரு லிட்டர் டீசல் விலை 100 ரூபாயை தாண்டியிருந்தது. இந்நிலையில், இன்று சென்னையிலும் டீசல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது. எரிபொருள் விநியோகத்தில் போக்குவரத்து செலவு அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுகிறது.
சமீபத்திய செய்தி: சென்னையில் கொலை முயற்சி.. அந்தமானில் பதுங்கல் - சாதூர்யமாக கைது செய்த போலீஸ்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News