ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்! - வாசகர்கள் கமெண்ட்ஸ் #LikeDislike

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, மார்ச் 1-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘இந்திய மாணவர்களைப் பாதுகாப்பாக மீட்க இந்திய அரசு என்ன செய்யவேண்டும்?‘ எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே. இன்றைய தலைப்பு மாலை 7 மணிக்கு புதிய தலைமுறை சமூக வலைதள பக்கங்களில் பகிரப்படும்.

சாஜித் சுட்டுரை...

உடனடி போர் நிறுத்தத்திற்கு ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட இடைவெளியாவது மற்ற நாட்டு குடிமக்கள் வெளியேறுவதற்கு போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும்..! ஒருவித போர் ஜனநாயக நெறி!!

Hulk

தேர்தல் வேலைய கொஞ்சம் ஓரமா வச்சிட்டு இருக்குற ராணுவ விமானங்களையாவது உடனே அனுப்பி மீட்கணும்

balamurugan

Talk to the Russian officials and take the indians who are from the eastern parts to the Russia with a safety measures

Sanjeevi

நமது நாட்டு போர் விமானங்களையும், போர் வீரர்களையும் அனுப்ப வேண்டும் சண்டைக்காக அல்ல, மக்களை பாதுகாப்பாக அழைத்து வர. ரயில்கள் மூலமாக ஒரு சிறப்பு அனைத்து நகரங்களுக்கு அனுப்ப வேண்டும். இந்திய கொடி பொருத்திய வாகனங்கள் சென்று அங்கு உள்ளவர்ளை மீட்க வேண்டும், இந்திய கொடி போர்த்திய வானங்களை ரஷ்யா தாக்குதல் பண்ணக்கூடாது. இவர்களை அழைத்து வரும் வானகம் பாதுகாப்பாதான இருக்க வேண்டும். இதை செய்தால் மட்டும் முடியும். மேலும் குறிப்பிட்ட பகுதியை பொது மக்கள் செல்லும் பகுதியாக அறிவித்து மக்கள் வெளியேற்றம் செய்ய வேண்டும்

image

வசந்த் ஊராட்சி மன்ற உறுப்பினர்

உடனடியாக உக்ரைன் மற்றும் இரஷ்ய தூதர்களை தொடர்பு கொண்டு இந்திய மாணவர்களை பாதுகாப்பு நிறைந்த இடங்களில் தங்க வைக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்க வேண்டும். மேலும் இதனை உறுதிபடுத்த இரு நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர்களும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

Advice Avvaiyar

இந்திய மாணவர்கள் ,இந்தியர்கள் மட்டுமல்ல அனைத்து நாட்டு மக்களைப் பத்திரமாக வெளியேற்றி அனுப்பிய பின், இரு நாடுகளுமே, தொடர்ப் பேச்சுவார்த்தையில் விட்டுக்கொடுத்து, போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட வேண்டும். சண்டை எதற்கும் எப்பவும் தீர்வு ஆகாது. சமாதானமே நீடித்த பலன், நிம்மதியைத் தரும்.

TAMIL SIBI.

பாதுகாப்பாக மீட்க வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை.
அந்த கவனம் உணவு பொருட்கள் இந்திய அரசு செய்ய முதலில் ஏற்பாடு செய்யவேண்டும்.

END GAME

மாணவர்களை வெளியேற விடாமல் தடுக்கும் உக்ரைனின் மீது தாக்குதல் நடத்தி மீட்க வேண்டும்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post