சென்னை அருகே கண்டெய்னர் யார்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரு. 7.5 கோடி மதிப்பிலான 5 டன் செம்மரக் கட்டைகளை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
சென்னை அடுத்த புழலில், அம்பத்தூர் செல்லும் சாலையில் தனியாருக்குச் சொந்தமான லாரிகள் மற்றும் கண்டெய்னர் நிறுத்தும் யார்டு ,யங்கி வருகிறது. ,ந்த கிடங்கில் செம்மரக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சென்னை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு டிஎஸ்பி குமரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ,ந்த தகவலின் பேரில் ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் லாரி நிறுத்தும் யார்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் கேரள பதிவெண் கொண்ட லாரியில் சுமார் 5 டன் எடை கொண்ட முதல் தர செம்மரக் கட்டைகள் ,ருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ,தையடுத்து சுமார் 7.5 கோடி ரூபாய் மதிப்புள்ள 5 டன் செம்மரக் கட்டைகளை அதிரடியாக பறிமுதல் செய்த ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் அவற்றை புழல் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
,ந்த செம்மரக் கட்டைகள் ஆந்திராவில் ,ருந்து கடத்திவரப்பட்டு கப்பல் வழியாக வெளிநாடுகளுக்கு கடத்த சரக்கு முனையத்தில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. ,தையடுத்து செம்மரக்கட்டைகளை கடத்தி வந்த லாரியின் ஓட்டுநர், உரிமையாளர் யார் எனவும் ,ந்த கடத்தலில் லாரி யார்டின் உரிமையாளருக்கும் தொடர்பு உள்ளதா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News