காவல் ஆணைய முன்னாள் தலைவரின் காவலருக்கு கத்திக்குத்து

சென்னையில் காவல் ஆணையத்தின் முன்னாள் தலைவரின் பாதுகாவலரை ஒரு கும்பல் கத்தியால் குத்திவிட்டு தப்பியுள்ளது.

காவல் ஆணையத்தின் தலைவராக இருந்த ஓய்வு பெற்ற நீதிபதி சி.டி.செல்வம், தனது பாதுகாவலருடன் காரில் சென்று கொண்டிருந்தார். திடீரென்று அசோக் நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சிலர் குறுக்கே வந்து அதை சாலையின் நடுவே நிறுத்தினர். இதையடுத்து பாதுகாவலர் சக்திவேல் காரில் இருந்து இறங்கி மோட்டார் சைக்கிளில் இருந்த நபரை விலகிச்செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.

இதற்கு அந்த நபர் மறுக்கவே இருவருக்கும் கடும் வாக்குவாதம் மூண்டது. அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்த மற்றொரு நபர் ஒரு கத்தியால் காவலர் சக்திவேலை தலையில் குத்திவிட்டு தப்பிச்சென்றார். தடுத்து நிறுத்த முயன்ற பொது மக்களையும் அவர்கள் கத்தியை காட்டி மிரட்டிவிட்டு தப்பினர். இச்சம்பவத்தில் தலையில் கடுமையாக காயமடைந்த சி.டி.செல்வத்தின் பாதுகாவலர் சக்திவேலுக்கு சிகிச்சை தரப்பட்டது. தப்பி ஓடிய கும்பலை காவல் துறையினர் தேடி வருகின்றனர்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post