
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 மற்றும் குரூப் 2-ஏ பணிகளுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.
டி.என்.பி.எஸ்.சி.-யின் குரூப்-2 மற்றும் குரூப் 2 ஏ-வுக்கான காலி பணியிடங்களுக்கு, நேர்முகத்தேர்வு மூலம் 116 இடங்கள் உட்பட 5,529 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு கடந்த பிப்ரவரி 23-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அன்று தொடங்கிய விண்ணப்ப விநியோகம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. அந்தவகையில் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.

ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள், தங்கள் விண்ணப்பங்களில் ஏதும் திருத்தம் இருப்பின் அதை OTR கணக்கு மூலம் இன்று மாலைக்குள் மேற்கொள்ள வேண்டும் என்றும் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இப்போது விண்னப்பிக்கும் இத்தேர்வுகளில், குரூப் 2-க்கான முதல்நிலை தேர்வு மே 21-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு மொத்தம் 5,831 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு நடைபெற உள்ளது. தேர்வின் முடிவுகள், ஜூன் மாதத்தில் வெளியிடப்பட்டு, முதன்மை எழுத்துத்தேர்வு செப்டம்பர் மாதமும் நடைபெறும். டிசம்பர் 2022 - ஜனவரி 2023 மாதங்களில், கலந்தாய்வு மற்றும் நேர்முக தேர்வு நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்தி: '10 நிமிட டெலிவரி' - சர்ச்சையான ஜொமோட்டோ நிறுவனர் பதிவு!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News